தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என அவரது பிஆர்ஓ தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.