தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்! - movie

தங்கர் பச்சான் இயக்கும் புதிய படத்தில் மம்தா மோகன்தாஸ் நடிக்கவுள்ளார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்
தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்

By

Published : Jul 28, 2022, 9:28 PM IST

தங்கர் பச்சான் இயக்கும் புதிய படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். படத்தின் தலைப்பு “கருமேகங்கள் ஏன் கலைகின்றன?” என்பதிலிருந்து “கருமேகங்கள் கலைகின்றன“ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 25 முதல் கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை, ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும் நடிக்கிறார்கள். முந்தைய திரைப்படங்கள் போலவே இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட திரைப்படமாக இது இருக்கும் என தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். கண்மணி எனும் கதாபாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ள பல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகியிருக்கிறார்.

இதையும் படிங்க:'தி லெஜெண்ட்' பட நாயகி ஊர்வசி ராவ்டேலா புகைப்படத்தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details