சென்னை:மளையாளத்தில் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் அண்மையில் வெளியான "மாளிகப்புரம்" திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை(ஜன.26) வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, "இதுபோன்ற படத்திற்கு நான் பாடல் எழுதுவேன் என்று நினைக்கவில்லை. அதற்கு ஐயப்பனின் அருள்தான் காரணம் என்று நினைக்கிறேன். இப்படம் உணர்வுப்பூர்வமானது. இப்போது பலரும் திரையரங்குகளுக்கு செல்ல பயப்படுகிறார்கள். ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால்தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்" என்று கூறினார்.
நடிகர் உன்னி முகுந்தன் பேசும்போது, "மாளிகப்புரம் என்னுடைய மற்ற படங்களைப் போல் வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான படமாக மாளிகப்புரம் இருக்கும். இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனக்கு ஒரு நல்ல குடும்ப படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் ஐயப்பன் பக்தன்தான்.