சென்னை:மலையாள சினிமாக்கள் மொழி கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது. பல படங்கள் பல்வேறு மொழிகளில் ஹிட் அடிக்கிறது. அப்படி மலையாள மொழியில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் மாளிகப்புரம். விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உன்னி முகுந்தன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் தனுஷ் நடித்த சீடன் படத்தில் நடித்தவர்.
மாளிகப்புரம் படத்தில் ஐயப்ப பக்தராக சிறப்பாக நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களாக தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருத்தனர்.
கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் படமாக இது உருவாகியிருந்தது. இப்படத்தில் சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், TG.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.