மும்பை:பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கடந்த 1998ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு அர்ஹான் என்கிற மகன் உள்ளார். சில ஆண்டுகளிலேயே இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து மலைக்காவுக்கும், பாலிவுட் முன்னணி நடிகரும், தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. மலைக்கா அர்ஜுன் கபூரைவிட 12 வயது மூத்தவர். இருவரும் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வயது வித்தியாசத்திற்காக சமூக வலைதளங்களில் பலரும் இவர்களை கலாய்த்து தள்ளினாலும், அதை பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிந்து கொள்வார்கள்.