ஹைதராபாத்:தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தனது மனைவியுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸை அமெரிக்காவில் சந்தித்தார். மேலும், அந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்தப் பதிவில், “ பில் கேட்ஸ் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
இந்த உலகம் கண்ட மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வையாளர், இருப்பினும் மிகுந்த தன்னடக்கத்துடன் இருக்கிறார்” என்ற வாசகத்துடன் பதிவிட்டனர். தற்போது நடிகர் மகேஷ்பாபு தன்னுடைய விடுமுறை நாட்களை அமெரிக்காவில் களித்து வருகிறார்.