நடிகர் அஜித் மே 1ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். உழைப்பாளர் தினமான இன்று அஜித் பிறந்த நாளும் வருவதால், சென்னை மெரினாவில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலையில் உள்ள அனைத்து உருவங்களையும் அஜித் குமாராக வடிவமைத்து மதுரை முழுவதும் அவரது ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி அசத்தியுள்ளனர்.
மேலாடையின்றி வேட்டியோடு நரைத்த தலையுடன் உழைப்பாளர் சிலையிலுள்ள அனைத்து உருவங்களையும் அஜித் குமாராக சித்தரித்து சுவரொட்டியை வடிவமைத்துள்ளது காண்போரை பெரிதும் ஈர்த்துள்ளது. 'பில்லா ஸ்டார் அஜித் ரசிகர்கள் - மதுரை' என சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளனர். 'உழைப்பாளர்களின் சின்ன மே' என அதே சுவரொட்டியில் அஜித்தைப் புகழ்ந்துள்ளனர்.