கோவா: 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நேற்று (நவ.21) கோவாவில் துவங்கியது. அதன் துவக்க விழா நிகழ்ச்சியாக, பிரபல பாலிவுட் நடிகர்கள் மாதுரி தீட்சித் (Madhuri Dixit) மற்றும் சாகித் கபூர் (Shahid Kapoor) ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, நடிகை மாதுரி தீட்சித்துக்கு, தனது திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அதனை அடுத்து, மாதுரி மேடையில் பேசுகையில், “இந்த விருது பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதைப் போன்று விருதளித்து கவரவிக்கப்படுவது, மேலும் சிறப்பாக நடிக்க ஊக்கம் அளிக்கிறது. மேலும், மாதுரி தீட்சித் தனது நடன நிகழ்வின்போது, டோலா ரே டோலா (Dola Re Dola), ஓ ரே பியா (O Re Piya), (கர் மோரே பர்தேசியா) Ghar More Pardesiya போன்ற அவரது நடனத்தில் ஹிட்டான பாடல்களுக்கு நடனமாடினார்.
விழா மேடையில் அவரது நடனம் அனைவரையும் கவரும் வைகையில் இருந்ததாகவும், அதேபோல் நடிகர் சாகித் கபூரின் நடனமும் பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் விதத்தில் இருந்ததாகவும் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, சாகித் கபூர் கபீர் சிங் (Kabir Singh) படத்தின் இசைக்கு பைக்கில் என்ட்ரி கொடுத்தது அரங்கில் கைதட்டல்களை ஒலிக்கச் செய்தது.