தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Maamannan: மாரி செல்வராஜ்-க்கு கார் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்! - சினிமா செய்திகள்

மாமன்னன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் காரினை பரிசாக வழங்கி உள்ளார்.

Maamannan movie success celebration Udhayanidhi Stalin gifted a Mini Cooper car to director Mari Selvaraj
மாரி செல்வராஜுக்கு கார் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்

By

Published : Jul 2, 2023, 12:14 PM IST

Updated : Jul 2, 2023, 3:19 PM IST

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியான திரைப்படம், மாமன்னன். இப்படத்தில் வடிவேலு மாமன்னனாக சிறப்பாக நடித்திருந்ததாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். மேலும் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு மற்றும் வெற்றியை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பு மிகவும் அற்புதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வழக்கமான மாரி செல்வராஜ் படமாக இப்படமும் வந்துள்ளது. சமூகநீதி பேசும் படமாக இது இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த படம் முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக இது உள்ளது என்ற கருத்தும் பரவி வருகிறது. சமூகநீதி பேசும் இப்படம், அனைத்து இடங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாமன்னன் படம் வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர்

படத்தின் இரண்டாம் பாதியில் சில தொய்வுகள் இருந்தாலும், படமாக ரசிக்க வைப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பரிசாக கொடுத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள்.

தங்களுடைய எண்ணங்களை கதையுடனும், களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துக்களை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது.

வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயன்ட் நிறுவனம் நிறுவனம் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ்-க்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Robo Shankar:'கட்டை விரலையாவது தொட்டுக்கிறேன்' ஹன்சிகாவை கொச்சையாக பேசிய ரோபோ சங்கர்

Last Updated : Jul 2, 2023, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details