கோவை:தமிழ்நாட்டின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்தநாள் இன்று(ஜன.17) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அவரது சிலைகளுக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அவர்களது வலைதள பக்கங்களில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். சினிமா துறை சார்பிலும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி 80-வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு லங்கா கார்னர் உள்ளிட்டப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.