தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உலக அரங்கில் ஒலிக்கவிருக்கும் லிடியனின் புதிய இசை முயற்சி..! - குரொமாடிக் கிராமாடிக்

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம், தனது முதல் சுயாதீன ’ஜாஸ்’ ஆல்பம் பாடலை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.

உலக அரங்கில் ஒலிக்கவிருக்கும் லிடியனின் புதிய இசை முயற்சி..!
உலக அரங்கில் ஒலிக்கவிருக்கும் லிடியனின் புதிய இசை முயற்சி..!

By

Published : Jun 14, 2022, 10:28 PM IST

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டென்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர்.

இந்த ஆல்பத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன. ஆல்பத்தைப் பற்றிப் பேசிய லிடியன், "உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன்," என்றார்.

உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி அன்று இந்த ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த ஆல்பம் சர்வதேச தளங்களிலும் கிடைக்கும் என்றும் பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் லிடியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'வால்வரின்' திரைப்பட ஹீரோவுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details