தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி...!' - ட்விட்டரில் லோகேஷ் கனகராஜ் - விக்ரம் ட்ரெய்லர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தன் அடுத்த படமான ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லருக்கு ஏகோபித்த வரவேற்பளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

’வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி...!’ - ட்விட்டரில் லோகேஷ் கனகராஜ்
’வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி...!’ - ட்விட்டரில் லோகேஷ் கனகராஜ்

By

Published : May 17, 2022, 4:28 PM IST

ட்விட்டரின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி...!’” என மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவரின் அடுத்த படமான ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரமாண்ட வெளியீட்டு விழாவில் வெளியானது.

வெளியான முதலிலிருந்தே அந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும் கவுரவத் தோற்றத்தில் வரவிருக்கிறார்.

ரசிகர்களிடமும், தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் 3 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: 'ரவுடி பேபியைக் காணோம்' - தனுஷின் யூ-ட்யூப் சேனல் முடக்கமா?

ABOUT THE AUTHOR

...view details