தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ் கனகராஜ்! - sivakarthikeyan

G squad : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'G squad' என பெயரிடப்பட்டுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

'G squad' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்
'G squad' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 8:18 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட 5 படங்களை இயக்கி உள்ளார். தனது முதல் படமான மாநகரம் மூலம் ரசிகர்களை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபல இயக்குநராக தமிழ் சினிமாவில் வளர்ந்தார்.

லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய திரைப்படம் 'லியோ'. நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய் ஆகியோரை வைத்து இயக்கி ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளார்.

ரஜினிகாந்தின் Thalaivar171 படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது கதை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனிடையே லோகேஷ் கனகராஜ், புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளதாக அறிவித்து உள்ளார். 'G squad' என பெயரிடப்பட்டுள்ள தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் அறிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நான் 5 படங்கள் இயக்கியுள்ளதை தொடர்ந்து, புதிய தயாரிப்பு நிறுவனம் 'G squad' தொடங்குவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதலில் எனது நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்கள் தயாரிக்கப்படும்" என்று பதிவிட்டு உள்ளார்.

'G squad' தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவில் தேள் (scorpion) இடம் பெற்றுள்ளது. இந்த லோகோ, லோகேஷ் கனகராஜின் எல்சியு (LCU) யுனிவர்சில் தொடர்புடையதாகும். லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள thalaivar 171 படத்தில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கல்யாணி ப்ரியதர்ஷன் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் கலக்கும் ’ஆண்டனி’ டிரெய்லர் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details