நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனைப் படைத்துள்ளது. இதனையடுத்து, அப்படத்தின் வெற்றி விழா இன்று(ஜூன் 17) நடந்தேறியது. அதில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ,”என்னுடையே ஆஸ்தான ஹீரோவிற்கு படம் செய்யும் போது என்னால் சாதாரணமாக செய்துவிட முடியாது.
அதை எழுத எனக்கு நிறைய நேரம் தந்த லாக்டவுனுக்கு நன்றி. இதன் வெற்றிக்கு கமல் சார் எனக்கு கொடுத்த முழு சுதந்திரம் தான் காரணம். இதை சாத்தியமாக்கிய ஊடகம், மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நன்றி. இந்த படம் உலகெங்கும் வெற்றியடைந்ததற்கு கமல் சாரின் புரொமோஷன் தான் காரணம். சினிமாவுக்கு நிச்சயம் சின்சியராக இருப்பேன்.