சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிப்பில் தயாராகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் இன்று (ஜூன் 3) உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. நான்கு வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் திரைப்படம் வெளியானதை அடுத்து, அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் முதல் காட்சியை ரசிகர்களோடு இணைந்து கண்டுகளித்தனர்.