சென்னை: இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) சார்பில், கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து திரையிடப்பட்டு, வெற்றி பெரும் படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அந்த வகையில், 21ஆம் அண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சி ராயபேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐசிஏஎஃப்-இன் தலைவர் சிவன் கண்ணன், நடிகை பார்வதி நாயர், சர்வதேச திரைப்பட விழாவின் பொதுச் செயலாளர் தங்கராஜ், ஜூரி மெம்பர்களாக யூகி சேது, மோகன் ராஜா மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சர்வதேச திரைப்பட விழாவிற்காக, 57 நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதிலிருந்து ஜூரி மூலம் சிறந்த 126 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 25 தமிழ்ப் படங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து 12 படங்கள் தேர்வாகியுள்ளன.
மேலும், இந்த திரைப்பட விழாவில் உலக சினிமாவில் 12 படங்களும், இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட உள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக சினிமாவில் தேர்வான 12 படங்களில் 2 படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்பட விழாவில், தமிழ் சினிமாவில் இருந்து தேர்வான 12 படங்களிலிருந்து சிறந்ததாக தேர்வு செய்யப்படும் முதல் 3 படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் பரிசும், உலக சினிமாவில் தேர்வாகும் சிறந்த 3 படங்களுக்கு கோப்பை, சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், போட்டிப் பிரிவில் திரையிட தேர்வான 12 தமிழ் படங்கள்:
1. இயக்குநர் வசந்தபாலனின் 'அநீதி'
2. இயக்குநர் மந்திரமூர்த்தியின் 'அயோத்தி'
3. இயக்குநர் தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன'