கிரிக்கெட் உலகை தாண்டி தல தோனி திரை உலகிலும் கால் பதித்துள்ளார். அந்த வகையில் தோனி மற்றும் சாக்ஷி தோனி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பின் முதல் படமாக எல்.ஜி.எம் திரைப்படம் தயாராகி வருகிறது. தமிழ் மக்கள் மீது கொண்ட பற்று காரணமாகவோ எல்லது தமிழ் மக்கள் தோனி மீது கொண்ட பற்று காரணமாகவோ தோனி தனது முதல் படத்தை தமிழ் மொழியில் தயாரித்து வருகிறார்.
லெட்ஸ் கெட் மேரீட் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் காதல், கல்யாணம், காமெடி, கலாட்டா என அனைவரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் உள்ள சம்பவங்களை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஒரு ஃபேமலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து படக்குழு தற்போது எல்.ஜி.எம்-ன் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தோனி எண்டெர்டெயின்மெண்ட் அதில் "படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வழங்குகிறோம்! இந்த வேடிக்கையான பயணத்தில் எங்களுடன் சேர தயாராகுங்கள்" என குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரகிகர்கள் வெகுவாக வரவேற்றுள்ள நிலையில் தங்களது சமூக வலைதளப்பக்கத்திலும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.