தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து.. ஒருமணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ டிரெய்லர்! - சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து

Leo trailer: லியோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. இந்நிலையில் ஒரு மணி நேரத்தில் மட்டும் ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ டிரெய்லர்!
10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ டிரெய்லர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 10:48 PM IST

சென்னை: நடிகர் விஜயின் 67வது படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜைய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் நடித்துள்னர்.

குறிப்பாக த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பின்னர், விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். முன்னதாக இந்த ஜோடி கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி போன்ற படங்களில் கலக்கியது. அந்த வரிசையில் 5வது முறையாக இணையும் விஜய்-த்ரிஷா கூட்டணி குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'மாஸ்டர்' படத்துக்கு பிறகாக விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் இணைவது இது 2வது முறையாகும். மேலும் அனிருத் கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக விஜய்யின் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனை அடுத்து 'நா ரெடி' மற்றும் 'Badass' என இரண்டு பாடல்கள் வெளியாகி, ரகிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து, படத்திற்கு எந்த வித ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் படம் வெளியாவது ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தினாலும், டிரெய்லர் குறித்த அறிவிப்பு துவண்டு போன ரசிகர்களை உற்சாகமூட்டியது.

இந்நிலையில் இன்று காலையில் இருந்தே 'லியோ' படத்தின் டிரெய்லருக்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். காரணம் இன்று டிரெய்லர் வெளியிடு என்று அறிவித்த தயாரிப்பு நிறுவனம், வெளியாகும் நேரத்தை அறிவிக்கவில்லை. இதனை அடுத்து வெளியாகும் நேரம் குறித்து பல கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பதற்றம் குறைந்தது. சொன்ன மாதிரியே சரியாக 6.30 மணிக்கு படத்தின் டிரெய்லரை சன் டிவி தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டது.

படத்தில் த்ரிஷா விஜய்யின் மனைவியாக நடித்திருப்பதாக தெரிகிறது. மேலும் கௌதம் மேனன் போலீசாகவும், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் கேங்ஸ்டர் கும்பலாக வருகின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது விஜய் ஆவேசமாக பேசும் வசனத்தில் தெரியவருகிறது.

மேலும் படம்‌பக்கா ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் ஆக இருக்கும் என்பது டிரைலர் மூலம் உணரமுடிகிறது. தற்போது ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் லியோ படத்தின் டிரெய்லர், ஐந்தே நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்ததாகவும், ஒரு மணி நேரத்திற்குள்ளாக 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக சன் டிவி பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: "அடுப்புல ஆரம்பிச்சு, இடுப்புல முடிஞ்சிருச்சே குமாரு" - பிக் பாஸ் வீட்டில் அடுத்தடுத்த சரவெடி!

ABOUT THE AUTHOR

...view details