தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பொன்னியின் செல்வனில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதா?..! : படக்குழுவினருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் - மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வனில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது..! : படக்குழுவினருக்கு நோட்டீஸ்
பொன்னியின் செல்வனில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது..! : படக்குழுவினருக்கு நோட்டீஸ்

By

Published : Jul 16, 2022, 4:31 PM IST

சென்னை:கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது எனவும் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

சோழ வம்சத்தை வைத்து படம் எடுக்கும் மணிரத்தனத்திற்கு விசுவாசமாக இருக்கும் நிலையில், வம்சத்தின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் விஸ்வரூபம் எடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தவிர தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் படத்தில் நடித்துள்ள விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'முழுக்கை சட்டை அணியத் தடை' - நீட் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு!

ABOUT THE AUTHOR

...view details