இயக்குநர் ப்ரியாவின் ’அனந்தம்’ எனும் வெப் தொடர் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது. பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுப்பூர்வமான கதையினைக் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாக இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது. பிரகாஷ் ராஜ், சம்பத், ஜான் விஜய், சம்யுக்தா, லட்சுமி கோபாலசாமி மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான இதயத்தை கவர்ந்திழுக்கும் நடிப்பு, இந்த ஒரிஜினல் தொடருக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இணையத்தொடர்கள்! - ஆனந்தம் வெப் தொடர்
ஜீ5 ஒரிஜினலின் சமீபத்திய வெளியீடான ‘அனந்தம் மற்றும் கார்மேகம்’ ஆகிய இணையத் தொடர்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இணையத் தொடர்கள்..!
இத்தொடர் தவிர, ‘கார்மேகம்’ தொடர், ராதிகா சரத்குமாரின் அசத்தலான நடிப்பு, ரசிகர்களை ஈர்க்கும் உணர்வுப்பூர்வமான கதை, பரபர திரைக்கதை, பிரமாதமான உருவாக்கம் எனப் பல காரணங்களுக்காக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. ’ஜீ5’ இந்த இணையத் தொடர்களின் வெற்றியின் மூலம் ஹாட்ரிக் சாதனையைப் படைத்துள்ளது.
இதையும் படிங்க: கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..அதிர்ச்சியடைந்த இசைப்புயல்!