ஐபிஎல் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான லலித் மோடி, பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அதுவும் ஒருநாள் நடக்கும்" என லலித்மோடி குறிப்பிட்டுள்ளார். லலித் மோடி மீது போடப்பட்ட ஐபிஎல் பண மோசடி வழக்கில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார். 2018இல் லலித் மோடியின் மனைவி மினால் புற்றுநோயால் உயிரிழந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.