அமேசான் பிரைம் வீடியோவில் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் எனும் தொடர் செப்டம்பர் 2ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்தத் தொடரை ஆசிய பசிபிக் நாடுகளில் பிரபலப்படுத்துவதற்காக, மும்பையில் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தொடரில் நடந்திருக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகை தமன்னா இருவரும் கலந்து கொண்டனர்.
நடிகை தமன்னா பேசுகையில், ''லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ திரைப்படம் அதனுடைய சினிமா பாணியில் தனி கவர்ச்சியை கொண்டிருக்கிறது. இந்த காவியம் மீது உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் காதல் உள்ளது. அதனாலேயே தொடர்ந்து புதிதாக தோன்றுகிறது. இந்த திரைப்படம் வியக்கத்தக்க வகையிலான காட்சிகள் மூலம் கதையை எடுத்துச்செல்கிறது.
பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ’லார்ட் ஆஃப் த ரிங்ஸ்: த ரிங்ஸ் ஆஃப் பவர்’ நான் பார்த்த படைப்புகளில் வசீகரிக்கும் படைப்பாகவும், மயக்கும் தொடராகவும் உணர்கிறேன்” என்றார்.