KGF முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் “KGF Chapter 2” திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கிலும் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்துகொண்டுள்ளது. இந்திய அளவில் வெளியான இந்தப் படம் வசூலில் ஆயிரம் கோடியைத் தாண்டி சாதனை செய்தது.
OTTயில் வெளியாகிறது KGF Chapter 2 - அமேசான் பிரைம்
நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்துகொண்டிருக்கும் KGF Chapter 2 திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.
OTTயில் வெளியாகிறது KGF Chapter 2
இந்நிலையில் இந்தத் திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னதாக KGF முதல் பாகத்தையும் அமேசான் பிரைம் நிறுவனம் தான் OTTயில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன்!