தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“தசரா” திரைப்படம் - கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் - ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள் நேற்று(அக்-17) கொண்டாடப்பட்டதையடுத்து அவர் நடித்திருக்கும் தசரா படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

Etv Bharat“தசரா” திரைப்படத்தின் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Etv Bharat“தசரா” திரைப்படத்தின் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்

By

Published : Oct 18, 2022, 7:18 AM IST

தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் SLVC(ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் ) உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. நானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி வெண்ணிலாவாக நடிக்கும் அவரது கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (அக்-17)வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண் தோற்றத்தில் கலக்கலாக இருக்கிறார். நட்சத்திரமாக ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் உற்சகமாக நடமானடுவது போல் உள்ளது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவீன் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். “தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது. இதில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய்குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:சமந்தாவின் யசோதா பட ரீலிஸ் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details