சென்னை:இயக்குநர் எலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கவின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ரைசா வில்சன் நடித்த பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்குநர் எலன் இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் மூலம் ஹரீஷ் கல்யாணுக்கு தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் தனி அங்கீகாரம் கிடைத்தது.
இதனையடுத்து ஸ்டார் என தலைப்பிடப்பட்ட படத்தில் மீண்டும் ஹரீஷ் கல்யாண் நடிப்பதாக இருந்தது. நடிகர் ஹரிஷ் கல்யாண் சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன், தளபதி ரஜினிகாந்த், ஷாருக்கான் ஆகியோரது தோற்றத்தில் இருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அதற்கு பிறகு படப்பிடிப்பு தொடங்காமல் வேறு சில காரணங்களால் இந்த படம் குறித்து எந்த வித அப்டேட்டும் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து மீண்டும் இந்த படத்தில் தற்போது கவின் நடிப்பதாக்ல தற்போது வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் ஸ்டார் படத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வயது முதிர்ந்த போதிலும், வலிகள் மிகுந்த போதிலும், வலிமை குறைந்த போதிலும் வீரன் வாள் தரிப்பதை நிறுத்தவில்லை’ என கேப்ஷனுடன் ஸ்டார் பட போஸ்டரை ஷேர் செய்துள்ளார்.
நடிகர் கவினுக்கு லிஃப்ட், டாடா ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கவினுக்கும் அவரது காதலியான மோனிகாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் நடந்தது.
இதையும் படிங்க:Shahruk khan Jawan : புர்ஜ் கலிஃபாவில் வெளியாகும் "ஜவான்" டிரெய்லர்... ரசிகர்களுக்கு ஷாருக்கான் அழைப்பு!