தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கட்டில்தான் கதாநாயகன்' - "கட்டில்" பட இயக்குநர் சுவாரஸ்யமான பேட்டி! - சினிமா செய்தி

கட்டில் தான் படத்தின் கதாநாயகன், என கட்டில் படத்தின் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

"கட்டில்" பட இயக்குநரின் பேட்டி
"கட்டில்" பட இயக்குநரின் பேட்டி

By

Published : Jan 3, 2023, 7:04 PM IST

"கட்டில்" பட இயக்குநரின் பேட்டி

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ’கட்டில்’. இப்படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். ஶ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட இப்படம் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது.

இப்படம் குறித்து பேட்டியளித்த இயக்குநர் கணேஷ் பாபு, 'உறவுகள் பற்றியும் நமது வீட்டில் இருக்கும் பழமையான பொருட்களுக்கும், நமக்கும் உள்ள பிணைப்பு பற்றியும் இப்படம் பேசுகிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றபோது படத்தை பார்த்த மற்ற மாநிலத்தவர்கள், அவர்களது ஊரிலும் படத்தை வெளியிட கேட்டுக்கொண்டனர்.

எனவே, இப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. நான் கதையின் நாயகனாக இருந்தாலும், இப்படத்தில் ‘கட்டில்’தான் கதாநாயகன்' என்றார்.

இதையும் படிங்க:நாளை வெளியாகிறது 'வாரிசு' ட்ரெய்லர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details