தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்பட ஒத்திகை: விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைஃப்! - மும்பைகர்

விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைஃப் நடித்து வரும் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஒத்திகையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

’மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்பட ஒத்திகை: விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைஃப்
’மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்பட ஒத்திகை: விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைஃப்

By

Published : Jul 25, 2022, 3:44 PM IST

ஹிந்தியில் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கவிருக்கும் ’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கத்ரீனாவுடன் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கத்ரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்காக விஜய் சேதுபதியுடன் ஒத்திகை நடைபெற்று வரும் படங்களைப்பகிர்ந்து ”வேலை நடந்து கொண்டிருக்கிறது” எனும் தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மும்பையில் தொடங்கியது. ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே தயாரிக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் வார இறுதியில் டிசம்பர் 23, 2022அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்திரையுலகில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ள விஜய் சேதுபதி ஏற்கெனவே ’மாநகரம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ’மும்பைகர்’ என்ற மற்றொரு ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கத்ரீனா கைஃப், விக்கி கவுஷலுக்குக் கொலை மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details