தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உசிலம்பட்டியில் காத்ரினா கைப்... அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம்... - Katrina Kaif s Atham for Arabic Punch Song

உசிலம்பட்டியில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் அரபிகுத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி குழந்தைகளுடன் அரபிக்குத்துக்கு ஆட்டம் போட்ட கத்ரீனா கைஃப்
பள்ளி குழந்தைகளுடன் அரபிக்குத்துக்கு ஆட்டம் போட்ட கத்ரீனா கைஃப்

By

Published : Sep 26, 2022, 8:20 PM IST

மதுரை:உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த குழந்தைகள் கத்ரீனா கைஃபை நடனமாடும்படி கேட்டுக்கொண்டனர்.

பள்ளி குழந்தைகளுடன் அரபிக்குத்துக்கு ஆட்டம் போட்ட கத்ரீனா கைஃப்

அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், கத்ரீனா கைஃப் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் குழந்தைகள், பெற்றோர்களுடன் உரையாடினார். இந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காத்ரினாவும், நடிகர் விக்கி கவுசாலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படிங்க:’நம் வரலாற்றை கொண்டாட வேண்டும்’ வைரலாகும் விக்ரம் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details