தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஓடிடியில் வெளியாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'! - காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்

வருகிற மே 27 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஓடிடியில் வெளியாகும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’..!
ஓடிடியில் வெளியாகும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’..!

By

Published : May 19, 2022, 7:06 PM IST

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தினை மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வெளியான படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் சிறந்த வெற்றியைப் பெற்றது. தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்புடன், இயக்குனர் விக்னேஷ் சிவனின் அட்டகாசமான உருவாக்கமும், அசத்தலான திரைக்கதையும், அனிருத்தின் துள்ளலான இசையும் சென்டிமெண்ட், வேடிக்கை, காதல் மற்றும் பாடல்கள் என அனைத்து அம்சங்களும் அடங்கிய இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் வருகிற 27ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் வெளியாகிறது.

இதையும் படிங்க: டைம் டிராவலில் சிவனாக நடிக்கும் யோகி பாபு - காத்திருக்கும் 'கொல மாஸ்' சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details