சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து இயக்குநர் பி.எஸ். மித்ரன் 'சர்தார்' என்கிற படத்தை இயக்கிவருகிறார். 'சிறுத்தை' படத்திற்குப் பிறகு நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் இதுவாகும். மேலும் அப்பா - மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
2022 தீபாவளி வெளியீடாக வெளியாகும் கார்த்தியின் 'சர்தார்' - நடிகர் கார்த்தி
கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக வெளியாகும் என அப்படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். கரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீட்டை முதல் ஆளாக கார்த்தி உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'விரைவில் ரசிகர்களை சந்திப்பார் டி.ஆர்..!' - சிம்பு