குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களின் மூலம் சிறந்த இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர், ராஜூ முருகன். இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
ஜப்பான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இதில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.