சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 4) ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்று (ஜூலை 5) வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் வந்தியத்தேவனுடைய குதிரையின் கதாபாத்திரத்தின் பெயர் ’செம்பன்’ என்பதையும் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
வரும் நாட்களில் மற்ற கதாபாத்திங்களின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகாபாரத கதையை இயக்குகிறாரா ராஜமௌலி?