தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா!

Kanguva Shooting Site Accident: சென்னையில் நடைபெற்று வந்த 'கங்குவா' படப்பிடிப்பில் ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் சூர்யா உயிர் தப்பினார்.

Kanguva Shooting Site Accident
கங்குவா படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. நூலிழையில் உயிர்த்தப்பிய சூர்யா..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 2:22 PM IST

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் படம், 'கங்குவா'. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, உலக மொழிகள் அனைத்திலும் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இதில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்தப் படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர், வீடியோ என அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை சூர்யா ரசிகர்களிடையே அதிகரித்தது. மேலும், பத்து மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த படம், அனைத்து மாநில மக்களையும் கனெக்ட் செய்யும் வகையில் 'கங்குவா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில், சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று (நவ.22) இரவு கேமிரா ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா காயம் ஏதும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் கூறியதாவது, “பிலிம் சிட்டியில் சில நாட்களாக கங்குவா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு கேமிரா ரோப் அறுந்து விழுந்ததில், சூர்யா உள்ளிட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இன்னும் பத்து நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து, இந்த விபத்து குறித்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், ஏற்கனவே இதே இடத்தில்தான் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இன்று ஆஜராக முடியாது.. போலீசாருக்கு மன்சூர் அலிகான் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details