தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கங்கனா ரணாவத்! - தாம் தூம்

நடிகை கங்கனா ரணாவத் தாம் சிறுவயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Kangana Ranaut
Kangana Ranaut

By

Published : Apr 26, 2022, 6:23 PM IST

ஹைதராபாத்: நடிகை கங்கனா ரணாவத் தனது சிறுவயதில் நடந்த நிகழ்வு ஒன்றை லாக் அப் (Lock Upp) என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “தனது வாழ்வில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றை என்னால் வாழ்நாள் இன்றளவும் மறக்க முடியவில்லை. அந்த வலி எனது சிறுவயதில் நடந்தது.

கங்கனா ரணாவத்

அப்போது இளைஞன் ஒருவன் என்னை தவறாக தொட்டான். என் ஆடைகளை களைவான். நான் அப்போது மிகவும் சிறிய பெண். என்னால் என்ன நடக்கிறது என்பதை உணர முடியவில்லை. என் ஆடைகளை களைந்து என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தது பலமுறை தொடர்ந்தது” என உணர்ச்சிப் பொங்க கூறினார்.

இதேபோல் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் தங்களுக்கு நிகழ்ந்ததை கூற முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்

இந்திய அளவில் பிரபலமாக உள்ள நடிகையான கங்கனா ரணாவத், தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் ஜெயலலிதா ஆக நடித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : முதல்ல ட்விட்டர், இப்போ இன்ஸ்டா... சோகத்தில் கங்கனா!

ABOUT THE AUTHOR

...view details