வாரணாசி: நடிகை கங்கனா ரணாவத் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கங்கை ஆரத்தி நிகழ்விலும் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் இங்கு இதற்கு முன்பு மணிகர்ணிகா படத்துக்கு முன்பு வந்துள்ளேன். தற்போது இங்கு மீண்டும் வந்துள்ளேன்.
காசியில் கங்கனா ரணாவத் வழிபாடு! வாரணாசியில் ஒவ்வொரு இடத்திலும் சிவன் இருப்பார். அதேபோல் அயோத்தி கோவிலின் ஒவ்வொரு தூண்களிலும் ஸ்ரீராமரும், மதுராவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இருப்பார்கள்” என்றார்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில் கங்கனா ரணாவத் இவ்வாறு கூறியுள்ளார். கங்கனா ரணாவத் தாகத் படத்தில் நடித்துவரும் நிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பதியில் கங்கனா தலைவி தரிசனம்... வேண்டுதல் என்ன தெரியுமா..?