தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாரா கமல்ஹாசன்...? - கமல்ஹாசன் அரசியல்

தனது திரைப்படங்களிலும், தான் தயாரிக்கும் படங்களிலும் கடந்த சில காலங்கலாக பெரும் ஆர்வம் காட்டி வரும் நடிகர் கமல்ஹாசன், அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா என சமூகவலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரசியலில் ஓய்வு பெற்றாரா கமல்ஹாசன்...?
அரசியலில் ஓய்வு பெற்றாரா கமல்ஹாசன்...?

By

Published : Sep 14, 2022, 5:46 PM IST

அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்கள் தயாரிப்பதிலும், நடிப்பதிலும், பிறர் நடிக்கும் படங்கள் தயாரிப்பதிலும் பிஸியாக இருப்பதால் அரசியலை கமல்ஹாசன் மறந்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் விக்ரம்.

இப்படம் வெளியாகி கமலே எதிர்பார்க்காத மிகப் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் கமல் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறாராம்.

மேலும், விக்ரமை போலவே அடுத்தடுத்து மல்டி ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் ஸ்கிரிப்ட்கள் அவரிடம் தயாராக இருக்கிறது என்கிறார்கள். இதற்காக சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என மூன்று பேரிடம் பேசி வருகிறார் என்கின்றனர். இது ஒருபுறம் இருக்க வரவுள்ள மக்களவைத் தேர்தலில் கமல் தி.மு.க வோடு கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

குறிப்பிட்ட இடங்களை பெற்றுத்தர உதயநிதி உறுதியளித்துள்ளாராம். கூடவே பிக்பாஸ் நிகழ்ச்சியும் தொடங்க உள்ளதால் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருப்பதால் அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிடத்தடை இல்லை!

ABOUT THE AUTHOR

...view details