நடிகர் மற்றும் இயக்குநரான டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், அவர் உடல் நலமாகி வருவதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்தார்.
இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கும் டி.ராஜேந்தரை இன்று(ஜூன் 14) நடிகர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். இவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.