தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'இதனால் தான் ஹிந்தியில் ''விக்ரம் ஹிட்லிஸ்ட்'' எனப் பெயர் வைத்தோம்..!' - கமல்ஹாசன் - விக்ரம்

'விக்ரம்' திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் சுழன்று வருகிறார், கமல்ஹாசன். அதில் ஒரு பகுதியாக இன்று(மே 26) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

’இதனால் தான் ஹிந்தியில் ‘விக்ரம் ஹிட்லிஸ்ட்’ என பெயர் வைத்தோம்..!’ - கமல்ஹாசன்
’இதனால் தான் ஹிந்தியில் ‘விக்ரம் ஹிட்லிஸ்ட்’ என பெயர் வைத்தோம்..!’ - கமல்ஹாசன்

By

Published : May 26, 2022, 7:08 PM IST

வருகிற ஜூன் 3அன்று வெளிவரவிருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசனிடம், “ஏன் ஹிந்தியில் இதற்கு ‘விக்ரம் ஹிட்லிஸ்ட்’ எனப் பெயர் வைத்தீர்கள்..?” என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “நான் முதலில் ஒரு கதையை வைத்திருந்தேன். அது அப்போதைய சூழலில் செய்யமுடியாமல் இருந்தது.

அதற்கு நான் வைத்திருந்த பெயர் ’ஹிட் லிஸ்ட்’. இந்நிலையில், கதை சொல்ல வந்த லோகேஷ் கனகராஜிற்கு இந்தக்கதையின் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்துப்போக, அதையே மையமாக வைத்து எழுதுகிறேன் எனச் சொன்னார். பின்னர், என் படத்தில் அவருக்கு மிகவும் பிடித்த படம் ‘சத்யா’, ‘விக்ரம்’ என சொன்னார். ஆகையால், இந்தப்படத்திற்கு ’விக்ரம் ஹிட்லிஸ்ட்’ எனப் பெயர் வைத்தார்” என சுவைபட தெரிவித்தார்.

இத்திரைப்படம் பான் இந்தியப்படமாக வெளியாகவுள்ள நிலையில், மேலும் ஹைதராபாத், கொச்சின், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கும் புரொமோஷன் வேலைகளுக்காக கமல்ஹாசன் செல்லவுள்ளாராம்.

இதையும் படிங்க: 'என் படத்தின் வசூலைத் துரத்திய பக்திப் படம்..!' - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details