நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வருகிற ஜூன் 3அன்று வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் ’விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனின் ஒரு பகுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கமல்ஹாசன் நேற்று(மே 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேன் இந்தியா படம் குறித்து ஒரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு,
“பேன் இந்தியா படங்கள் வெவ்வேறு தரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. சத்யஜித் ராய் எடுத்ததும் ஒரு வகையில் பேன் இந்தியப் படங்கள் தான். ஹிந்தியில் என்னுடைய ‘ஏக் துஜே கேலியே’ வெளியானபோது அதற்கு வணிக ரீதியாக பெறும் போட்டியாகத் துரத்தி வந்தது ’ஜெய் சந்தோஷிமா’ எனும் பக்திப் படம் தான். ’விக்ரம்’ ஒரு வித்தியாசமான பேன் இந்தியப் படம்” எனத் தெரிவித்தார்.
’என் படத்தின் வசூலைத் துரத்திய பக்திப் படம்..!’ - கமல்ஹாசன் இதையும் படிங்க:பாடலில் இடம்பெற்று சர்ச்சையான ’ஒன்றியம்’ வார்த்தை குறித்து விளக்கமளித்த கமல்!