லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் விக்ரம். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வசூலையும் வாரிக்குவித்தது. ஓடிடியிலும் ரிலீஸாகி பெரும் கவனம் ஈர்த்தது. கமல்ஹாசன் சினிமா வரலாற்றிலேயே இப்படம்தான் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது.
இந்நிலையில் இப்படம் இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு நூறு நாட்களை கடந்த படமாக இது அமைந்தது. இப்படத்தின் நூறாவது நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தமே 22 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த ஆடியோவில்,
"ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. தம்பி லோகேஷிற்கு என் அன்பும், வாழ்த்தும்!” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'Qantityயை விட Quality தான் முக்கியம்...!’ - நடிகர் ஜெயம் ரவி