தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்பு! - indian 2 shooting

பல்வேறு பிரச்சனைகளால் தடைபட்டிருந்த ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. . இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது - கமல்ஹாசன் பங்கேற்பு!
இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது - கமல்ஹாசன் பங்கேற்பு!

By

Published : Sep 22, 2022, 12:47 PM IST

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார், அந்த புகைப்படங்களை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

’இந்தியன் 2’ படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது.

இதனால் இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை ஹீரோவாக வைத்து புதிய படத்தை தொடங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வந்த நிலையில், தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது.

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு கடந்த மாதம் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கியது. அதில் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க:வெளியானது அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ABOUT THE AUTHOR

...view details