தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கமல் தயாரிப்பில் தொடர்ந்து நடிக்கவிருக்கும் முன்னணி நடிகர்கள்! - கமல்

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நாயகர்களின் கால்ஷீட்களுக்கு கமல் வலை வீசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் தயாரிப்பில் தொடர்ந்து நடிக்கவிருக்கும் முன்ணணி நடிகர்கள்..!
கமல் தயாரிப்பில் தொடர்ந்து நடிக்கவிருக்கும் முன்ணணி நடிகர்கள்..!

By

Published : May 27, 2022, 10:36 PM IST

நடிகர் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. வருகிற ஜூன் 3 அன்று வெளியாகிறது.

இந்நிலையில், அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளார், கமல். ஏற்கெனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகவுள்ள நிலையில், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் கால்ஷீட்டுகளுக்கு வலைவீசி வருகிறாராம், கமல்.

ஏற்கெனவே நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை தான் தயாரிக்க விஜயிடம் கால்ஷீட் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகர் ஜெயம்ரவி தானே கமலுக்கு கால் செய்து, கால்ஷீட் தருவதாகக் கூறியுள்ளாராம். மேலும், நடிகர் சூர்யாவும் கமல் தயாரிப்பில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 52ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகள்: தமிழ் பாடகர் பிரதீப் குமாருக்கு விருது!

ABOUT THE AUTHOR

...view details