தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச்.வினோத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - நடிகர் கமல்ஹாசன்! - tamil cinema news

H vinoth birthday: இயக்குநர் எச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 2:11 PM IST

சென்னை: இயக்குநர் எச்.வினோத் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் நாள்தோறும் நாம் தினசரி செய்தித்தாள்களில் படிக்கும் விநோதமான ஏமாற்று சம்பவங்களை பற்றிய கதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும்.

அதனை தொடர்ந்து கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். வட இந்தியாவை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய கொள்ளைச் சம்பவங்களை மிக நேர்த்தியாக எடுத்து பல தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றார்.

அதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக மாறினார். தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையான கதைகளை தேர்வு செய்து அதனை வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு ரசனைக்கு ஏற்றார் போல் படங்களை இயக்கி வருகிறார். எச்.வினோத்தின் சிந்தனைகள் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டது.

அதிக தனிமை விரும்பியான எச். வினோத் சில சமயங்களில் பஸ்ஸில் கூட எங்கோ ஓர் ஊருக்கு சென்று விடுவார் என்று அவர் பற்றி மறைந்த திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா கூறியது வைரலானது. மனிதர்கள் பற்றி நிறைய படிப்பது இவருக்கு பிடித்தமான ஒன்று. தனது படமாக இருந்தாலும் அதில் சுய விமர்சனம் செய்வது இவரது பழக்கம்.

ரசிகர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். தற்போது நடிகர்‌ கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இன்று (செப். 5) இயக்குநர் எச்.வினோத் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் "சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச்.வினோத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டு உள்ளார். இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எச்‌.வினோத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜெயிலர் படத்தில் ஆட்டம் போட வைத்த அனிருத்.. கலாநிதி மாறன் கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்!

ABOUT THE AUTHOR

...view details