தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இந்தியன் 2 படப்பிடிப்பை நிறைவு செய்தார் கமல்ஹாசன்.. ரிலீஸ் எப்போது? - kollywood updates

Indian 2 Movie Update: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை கமல்ஹாசன் நிறைவு செய்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பை நிறைவு செய்தார் கமல்ஹாசன்
இந்தியன் 2 படப்பிடிப்பை நிறைவு செய்தார் கமல்ஹாசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 1:05 PM IST

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. விக்ரம் திரைப்படம், கமல்ஹாசன் திரை வாழ்வில் இதுவரை காணாத வசூலை எட்டியது. இதனால் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார் கமல்ஹாசன். இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், விவேக், எஸ்.ஜே சூர்யா, மனோபாலா, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், பாபு சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, தயாரிப்பு நிறுவன பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் திரைப்படம் பாதியிலேயே முடங்கியது. விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல கட்டங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தின் நீளம் காரணமாக இரண்டு பாகங்களாக அதாவது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்தது. இரண்டு பாகங்களாக பிரிக்கும் பட்சத்தில் மேலும் சில காட்சிகள் எடுக்க ஷங்கர் திட்டமிட்டார். இதற்காக நடிகர் கமல்ஹாசன் மீண்டும் 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்தார்.

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய கமலுக்கான இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிஸியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படக்குழுவினருடன் கமல் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சத்தமில்லாமல் சாதித்த அஜித்தின் 'விடாமுயற்சி' - ரசிகர்கள் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details