தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மே 9-இல் வெளியாகிறது 'கல்கி 2898-AD'.. கமல் - பிரபாஸ் கூட்டணிக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு கோடை விருந்து!

Kalki 2898 AD : நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் 'கல்கி 2898-AD' திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kalki 2898 AD
கல்கி 2898-AD

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 2:28 PM IST

சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் பிரபாஸ். தெலுங்கில் பல படங்கள் நடித்து வந்த பிரபாஸுக்கு, பாகுபலி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், சாஹோ, சலார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது சினிமா உலகில் மோஸ்ட் வான்டட் நடிகராக அறியப்படும் பிரபாஸ், கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து சமீபத்தில் வெளியான 'சலார்' திரைப்படம், பிரமாண்ட வசூலை அள்ளியது எனலாம்.

தற்போது 'நடிகையர் திலகம்' திரைப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898-AD என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் இப்படத்தில், மிகப்பெரிய அளவில் CG மற்றும் VFX காட்சிகள் இடம்பெற உள்ளதாவும், இதற்காக மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகின. எதிர்காலத்தில் நடக்கும் கதையாக இது உருவாகியுள்ளது எனவும், படக்குழு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கல்கி 2898-AD திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 9ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படமும் கோடையை குறி வைத்து வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளியானது பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள்.. களைகட்டும் திரையரங்குகள்!

ABOUT THE AUTHOR

...view details