தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் சர்ச்சை கிளப்பிய இயக்குநர் லீனா - இப்போ யார் கையில் சிகரெட்? - KALI MOVIE POSTER ROW LEENA MANIMEKALAI

ஆவணப்பட போஸ்டர் மூலம் சர்ச்சையில் சிக்கிய இயக்குநட் லீனா மணிமேகலை தற்போது அவரது ட்விட்டரில் மீண்டும் ஒரு சர்ச்சை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மீண்டும் சர்ச்சை கிளப்பிய இயக்குநர் லீனா - இப்போ யார் கையில் சிகரெட்?
மீண்டும் சர்ச்சை கிளப்பிய இயக்குநர் லீனா - இப்போ யார் கையில் சிகரெட்?

By

Published : Jul 7, 2022, 12:20 PM IST

பிரபல ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலையின் புதிய படமான ‘காளி’ பட போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி பல சர்ச்சையை கிளப்பியது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச காவல்நிலையங்களில் லீனா மீது இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் கனடாவின் ஒட்டோவா இந்திய துணை தூதரகம் திரைப்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் இந்த போஸ்டரை நீக்குமாறு வலியுறுத்தி இருந்தது.

மீண்டும் சர்ச்சை கிளப்பிய இயக்குநர் லீனா - இப்போ யார் கையில் சிகரெட்?

இந்து கடவுளான காளி வேடம் அணிந்த பெண்ணின் வாயில் சிகரெட்டுடன் இருந்ததும், கையில் வானவில் கொடி இருந்ததுமே சர்ச்சை காரணங்களாக பேசப்பட்டது. இதற்கிடையில் லீனாவிற்கு பல தரப்பிலிருந்து கொலை மிரட்டலும் விடப்பட்டது. இருப்பினும் லீனா அவரது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

சிவன் வாயில் சிகரெட்: அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி தற்போது லீனா அவரது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் சிவன், பார்வதி வேடமணிந்த நபர்கள் வாயில் சிகரெட்டுடன் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி வீடியோ

ABOUT THE AUTHOR

...view details