தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜெயிலர் படத்தில் ஆட்டம் போட வைத்த அனிருத்.. கலாநிதி மாறன் கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்! - ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர்

Kalanithi Maran gift to anirudh: 'ஜெயிலர்' படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில், ரஜினிகாந்த், நெல்சன் ஆகியோரை தொடர்ந்து அனிருத்துக்கும் கலாநிதி மாறன் சிறப்பு தொகை மற்றும் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

Jailer celebration
ஜெயிலர் வெற்றி கொண்டாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 7:08 PM IST

Updated : Sep 4, 2023, 9:36 PM IST

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவ்ராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகும் முன்னதாகவே ரசிகர் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவிலிருந்தது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை, ஆன்மீக பயணமாக இமயமலை செல்வதற்கு முன் படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என செய்தியாளர்களிடம் கூறியது என அடுத்தடுத்து நிகழ்வுகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை விண்ணை முட்டச் செய்தது.

இதனையடுத்து 'ஜெயிலர்' படம் வெளியாகி உலகமெங்கும் பல வசூல் சாதனைகள் படைத்துள்ளது. குறிப்பாகப் படம் வெளியாகி ஒரே வாரத்தில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மூலம் தெரியவந்தது.

மேலும் அமேரிக்கா, மலேசியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஜெயிலர் படம் வெளியாகி பல வசூல் சாதனைகளை படத்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் வேகமாக 600 கோடி வசூலைத் தாண்டிய இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற சாதனையை 'ஜெயிலர்' படம் எட்டியுள்ளது.

இதையும் படிங்க: ஜெயிலர் தகர்த்தெறிந்த 16 சாதனைகள்... எட்ட முடியாத உயரத்தில் சூப்பர் ஸ்டார்...

அதனை தொடர்ந்து அண்மையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கு படத்தின் லாபத்தில் இருந்து ஒரு சிறப்பு தொகை காசோலையாகவும், இருவருக்கும் தலா ஒரு விலையுயர்ந்த சொகுசு காரும் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் தற்போது கலாநிதி மாறன் சிறப்பு தொகையை பரிசாக வழங்கியுள்ளார். முன்னதாக ரசிகர்கள் விக்ரம் படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், ஜெயிலர் படத்திற்காக இயக்குநர் நெல்சனுக்கும் பரிசுகள் வழங்கியதை குறிப்பிட்டு, இரண்டு படங்களுக்கும் இசையமைப்பாளரான அனிருத்துக்கு பரிசு வழங்கப்படாததை குறித்த மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் கலாநிதி மாறன் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி டபுள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: "ரஜினி அரசியலுக்கு வராமல் நிம்மதியாக இருக்கட்டும்" - நடிகர் சரவணன்!

Last Updated : Sep 4, 2023, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details