தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தமிழ் திரைத்துறை சார்பில் நடக்கவிருந்த 'கலைஞர் 100' விழா ஒத்திவைப்பு..! - தமிழ் திரையுலகின் கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் சார்பில் இம்மாதம் 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனவரி 6அம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் திரைத்துறையின் விழா ஒத்திவைப்பு
தமிழ் திரைத்துறையின் விழா ஒத்திவைப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 3:50 PM IST

Updated : Dec 8, 2023, 4:18 PM IST

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இம்மாதம் 24ஆம் தேதி நடைபெற இருந்த விழா, மிக்ஜாம் புயல் காரணமாக அந்த நிகழ்ச்சியைத் தமிழ் திரைத்துறை தள்ளி வைத்துள்ளது.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து 'கலைஞர் 100' என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா, வருகிற டிசம்பர் 24ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 'மிக்ஜாம்' புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள். மேலும், முதலமைச்சர் அவர்களும், அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள்.

இவற்றைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 24ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க:நிலவில் தண்ணீரைத் தேட பல்லாயிரம் கோடி செலவு செய்வது ஏன்?.. வேளச்சேரிக்கு படகில் சென்று பார்வையிடலாமே..! - இயக்குநர் பார்த்திபன்

Last Updated : Dec 8, 2023, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details