தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கதாநாயகிகளுக்கிடையே காதல்' - ராம் கோபால் வர்மாவின் புதிய படம்

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள 'காதல் காதல் தான்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நேற்று (மார்ச்.30) நடைபெற்றது.

By

Published : Mar 31, 2022, 7:11 PM IST

Updated : Mar 31, 2022, 7:22 PM IST

’இந்திய சினிமாவில் முதல் முறையாக இரு ஹீரோயின்களுக்குள் டூயட் சாங்’ - ராம் கோபால் வர்மா
’இந்திய சினிமாவில் முதல் முறையாக இரு ஹீரோயின்களுக்குள் டூயட் சாங்’ - ராம் கோபால் வர்மா

சென்னை: இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் 'காதல் காதல் தான்'. ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. 'Artsee Media / Rimpy Arts International' ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

என்னை ஆண் போல நடிக்கச் சொன்னார்:இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ்ப்பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

நாயகி நைனா கங்குலி பேசியதாவது, 'ராம் கோபால் வர்மா சாருக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற்சியான இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த மாதிரி கதையை எடுப்பது மிகவும் கடினம். வழக்கமாக நாயகன், நாயகி காதலிப்பார்கள். ஆனால், இதில் இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள்.

இதில் நடிப்பது எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. இந்தப்படம் ஆரம்பித்தபோது, நான் ஆண் போல் நடிக்க வேண்டும் என்றார். அதற்காக நான் சிலப் பயிற்சிகளை மேற்கொண்டேன். ஆண்களின் உடல் மொழிகளைப் பார்த்து கற்றுக்கொண்டு நடித்திருக்கிறேன். இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அது அவர்கள் குற்றம் இல்லை. அது ஹார்மோன் சம்பந்தப்பட்டது. அவர்களின் கதையை சொல்லும் இந்தப்படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.

’இந்திய சினிமாவில் முதல் முறையாக இரு ஹீரோயின்களுக்குள் டூயட் சாங்’ - ராம் கோபால் வர்மா

'தன்பாலின ஈர்ப்பாளர்கள் குற்றவாளிகள் அல்ல..!’: நாயகி அப்ஷரா பேசியதாவது, 'இங்கு இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தெலுங்கு, தமிழில் இந்தப்படம் வெளியாவது மிக மகிழ்ச்சி. 'காதல் காதல் தான்' மூலம் நான் இங்கு அறிமுகமாவது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. இங்கு நிறைய பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். படம் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றியது. இது நம் சமூகத்தில் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ராம் கோபால் வர்மா சாரின் தெளிவான பார்வை என்னை வியக்க வைத்தது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்களும் கடவுளின் குழந்தைகள் தான். இது ஒரு கமர்ஷியல் படம். இதில் இரண்டு பெண்களுக்கிடையேயான காதல் இருக்கிறது. பார்வையாளர்கள் அவர்களின் காதலைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இரண்டு ஹீரோயின்களுக்கிடையே டூயட் சாங் இருப்பது இதுவே முதல் முறை. ஒரு புதுமையான படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. ராம் கோபால் சாருக்கு நன்றி' எனத் தெரிவித்தார்.

இந்திய சினிமாவில் முதல் முயற்சி:இதனையடுத்து பேசிய ராம் கோபால் வர்மா, 'இந்தப்படத்தின் ஐடியா எனக்கு வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவம். தன் பாலின ஈர்ப்பாளர்களை நாம் பரிதாபமாகத் தான் பார்க்கிறோம். அரசே அனுமதி அளித்தாலும் நம் பார்வை மாறுவதில்லை. ஒரு காதல் ஜோடியை வைத்து நிறைய க்ரைம் திரில்லர் கதைகள் வந்துள்ளது. அதை மாற்றலாம் என்று தான் இதை எழுதினேன். இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்குச் செல்கிறார்கள். அவர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது. அவர்களின் பிரச்னை என்ன என்று யோசிக்கும்போது அதனை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம்.

முதலில் நைனா கங்குலி இதற்குத் தயங்கினார். அவருக்கு ஐடியா பிடித்திருந்தது. ஆனாலும் தயக்கம் இருந்தது. அதன் பிறகு ஒப்புக்கொண்டார். படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தன. இரண்டு ஹீரோயின்களை வைத்து டூயட் பாடல் எடுப்பதே இந்திய சினிமாவில் வித்தியாசம் தான். நைனா கங்குலி, அப்சரா இருவருக்கும் அவர்களின் தைரியத்திற்கும் நன்றி. அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. படம் உங்களுக்கும் பிடிக்கும். நன்றி' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'RRR' திரைப்படம் பார்த்த அமிதாப் பச்சன்

Last Updated : Mar 31, 2022, 7:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details