சென்னை:நடிகை அமலா பால் நடித்து, தயாரித்துள்ள படம் 'கடாவர்'. இந்த படம் நேற்று(ஆக.12) டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படம் அமலா பாலுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.